வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.880 உயர்வு!

சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.65,840க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக புதிய உச்சமாக வரலாற்றில் இல்லாத அளவிற்கு தங்கம் விலை ரூ.60 ஆயிரத்தை தாண்டியது.

இந்நிலையில் இன்றும் தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.65,840க்கும், ஒரு கிராம் ரூ.8,230க்கும் விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராமிற்கு ரூ.2 உயர்ந்து ரூ.112.00க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.112,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.