அடுத்த 2 மாதங்களுக்கு தங்கத்தின் விலை தொடர்ந்து உயர வாய்ப்புள்ளதாக தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் தங்கம் விலை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரு சவரனுக்கு ரூ.2000 வரை உயர்ந்து இருக்கிறது. அதிலும் சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 360 உயர்ந்துள்ளது. கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5,425 ரூபாய்க்கும், ஒரு சவரன் ரூ.43,400க்கு விற்கப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தங்கத்தின் விலை உயர்வு தொடர்பாக நியூஸ் 7 தமிழ் செய்திக்கு பேட்டி அளித்த தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்தி லால் கூறியதாவது, உலகச் சந்தையின் பொருளாதார வீழ்ச்சியும், இந்திய ரூபாய் மதிப்பின் சரிவின் காரணத்தினாலும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இதையும் படிக்கவும்: வணிக வளாகத்தில் பயங்கர தீவிபத்து; பல நூறு கோடி ரூபாய் பொருட்கள் சேதம்
மேலும், அமெரிக்காவில் வங்கிகளில் திவாலாகி வருவது, அதேபோல் ஐரோப்பியாவில் பொருளாதாரத்தின் வீழ்ச்சியாலும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது என்றும் கூறினார். மேலும் பங்குச்சந்தை வைப்பு நிதி உள்ளிட்டவைவீழ்ச்சியானதாலும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த வருகிறது என்றும் தெரிவித்தார்.
மேலும் பெரிய மற்றும் சிறிய முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதீத முதலீடு செய்ய தொடங்கியதால் உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக இன்னும் இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு தங்கத்தின் விலை உயர்ந்து விலை உச்சம் தொடுவதற்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதேபோல் வரும் காலங்களில் தங்கத்தின் விலை குறைவதற்கு வாய்ப்புகள் குறைவு என்றும் குறிப்பாக தங்கத்தின் விலை சரியக்கூடிய கரப்ஷன் பீரியட் (coruption period) என்ற காலத்தில் தங்கத்தின் விலை 100 ,200 ரூபாய் குறையும் தவிர தங்கத்தின் விலை அதிகமாக குறைவதற்கு வாய்ப்பு இல்லை தொடர்ந்து உயர தான் வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
அதேபோல் கொரோனா காலத்திற்குப் பிறகு பொருளாதாரத்தின் வீழ்ச்சியால் மட்டுமே 38 சதவீதம் வரை தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது என்றும், இனிவரும் காலங்களில் தங்கத்தின் விலை குறைவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் தெரிவித்தார்.