தெலங்கானா செகந்திராபாத்தில் உள்ள வணிகவளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் பலநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எறிந்து சாம்பலாகியுள்ளது.
தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் சமீபத்தில் உள்ள செகந்திராபாத் நகரில்
சொப்ன லோக் என்ற பெயரில் மாபெரும் வணிக வளாகம் ஒன்று உள்ளது. அங்கு ஏராளமான கடைகள், அலுவலகங்கள்,கிடங்குகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் இன்று இரவு 8 மணி அளவில் வணிக வளாகத்தின் 7,8 ஆகிய தளங்களில்
திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. சிறிய அளவில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் தீவிபத்தாக மாறி அங்குள்ள ஏராளமான கடைகளில் தீப்பற்றி எரிய துவங்கியது.
அப்போது வணிக வளாகத்தில் நூற்றுக்கணக்கானோர் பணியிலும், பொருட்களை
வாங்குவதற்காகவும் இருந்தனர். தீ விபத்தை பார்த்தவுடன் வணிக வளாகத்தில் இருந்த ஊழியர்கள், பொதுமக்கள்ஆகியோர் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். எட்டு பேர் வணிக வளாகத்தின் மேல் மாடியில் சிக்கிக் கொண்டு அங்கிருந்து வெளியே இயலாமல் கதறி கொண்டிருந்தனர்.
தீ விபத்து பற்றி தகவல் அறிந்து அங்கு 12 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த
ஹைதராபாத் தீயணைப்பு படையினர் மிக நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீயை
கட்டுப்படுத்தி ராட்சத ஏணியை பயன்படுத்தி வணிக வளாகத்தில் சிக்கி கொண்டிருந்த
எட்டு பேரையும் மீட்டனர்.
தொடர்ந்து தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தீ விபத்தில் வணிக வளாகத்தில் இருக்கும் கடைகள், கிடங்குகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் இருந்த பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பல் ஆகிவிட்டதாக தெரியவந்துள்ளது.
செகந்திராபாத் போலீசார் தீபத்திற்கான காரணம் பற்றி வழக்கு பதிவு செய்து
விசாரணை நடத்துகின்றனர். தீ விபத்தில் இதுவரை யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. தீ விபத்து காரணமாக வணிக வளாகத்தில் மின்தடை ஏற்பட்டுள்ளது. எனவே தீயை முழுவதுமாக கட்டுப்படுத்தி அனைத்து பின் மட்டுமே யாராவது உள்ளே சிக்கி கொண்டிருக்கிறார்களா? அல்லது யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது பற்றிய முழு விவரம் தெரியவரும்.