புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. கிராம் ரூ.6660-க்கு விற்பனை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்று ஒரு சவரன் ரூ.52,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இந்த மாதத்தில் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மாற்றமின்றி…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்று ஒரு சவரன் ரூ.52,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இந்த மாதத்தில் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மாற்றமின்றி  விற்பனை செய்யப்பட்ட நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று விலை உயர்ந்துள்ளது.  இன்று கிராம் ஒன்றிற்கு ரூ. 45 உயர்ந்து ஒரு கிராம் ரூ6,660-க்கும்,  சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.53,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.88-க்கும் ,  ஒரு கிலோ வெள்ளி ரூ.88,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.