தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தினசரி விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனிடையே நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,05,080-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.13,135-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.13,195-க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.1,05,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் 4-வது நாளாக இன்றும் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.220-க்கும், ஒரு கிலோ ரூ.2.20 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.




