தங்கம் விலை உயர்வு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்துள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தினசரி விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

இதனிடையே நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து சவரனுக்கு ரூ.1,09,280-க்கு விற்பனை செய்யப்பட்டது. அந்த வகையில், சென்னையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,710-க்கும் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,09,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து 6வது நாளாக வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2.45 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.