ரூ.45,000-ஐ நெருங்கும் தங்கம் விலை – பொதுமக்கள் கடும் அதிருப்தி..!

ஒரு சவரன் தங்கம் 45 ஆயிரம் ரூபாயை நெருங்குவதால், வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும்…

ஒரு சவரன் தங்கம் 45 ஆயிரம் ரூபாயை நெருங்குவதால், வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், சென்னையில் இன்று தங்கத்தில் விலை இன்று அதிகரித்துள்ளது.

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ரூ.44,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.45 உயர்ந்து ரூ.5,560-க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ரூ.44,680-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 5,585 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதேபோல் வெள்ளி ஒரு கிராம் நேற்று ரூ.78,000-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.500 குறைந்து, ரு.77,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50-க்கு விற்பனையாகிறது.

இதையும் படியுங்கள் : ‘லியோ’வால் விழாக்கோலம் பூண்ட திரையரங்குகள் – விதவிதமாய் கொண்டாடும் விஜய் ரசிகர்கள்..!

ஒரு சவரன் தங்கம் 45 ஆயிரம் ரூபாயை நெருங்குவதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.  தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தங்கத்தில் முதலீடு அதிகரிப்பு மற்றும் இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையேயான போர் காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.