நாமக்கல் மாவட்டம், பாலப்பட்டி கதிர்மலை முருகன் கோவிலில்
பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு , தங்க கவச அலங்காரத்தில்
முருகப் பெருமான் காட்சியளித்தார்.
செங்கப்பள்ளி கிராமம் பாலப்பட்டி கதிர்மலை முருகப்பெருமான் கோவிலில், பங்குனி உத்தர பிரம்மோற்ச விழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்வாக, மூலவர் முருகப்பெருமானுக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் மற்றும் விபூதி கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து, தங்க கவசம் சாற்றப்பட்டு மகாதீபம் காண்பிக்கப்பட்டது. பின்னர் , உற்சவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், திருக்கோவிலை மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு திருக்காட்சி தந்தார். காலை முதல் இத்திருத்தலத்தில் பல்வேறு வைபவம் மற்றும் நிகழ்வுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றனர்.
—கு.பாலமுருகன்







