பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பொள்ளாச்சி ஆட்டுச் சந்தையில் சுமார் ஒரு கோடிக்கும் மேல் வர்த்தகம் நடைபெற்றதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய சந்தையாக உள்ள பொள்ளாச்சி ஆட்டுச் சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் ஜூன் 29 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை பண்டிகை வருவதை முன்னிட்டு, இன்று நடைபெற்ற ஆட்டு சந்தையில் கூடுதலாக ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. உள்ளூர் மட்டுமின்றி ஈரோடு,சேலம் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலிருந்தும் அதிக அளவில் ஆடுகள் கொண்டு வரப்பட்டன.
உள்ளூர் வியாபாரிகள் மற்றும் கோவை,திருப்பூர் மற்றும் அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கி செல்வது வழக்கம்.
இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை வருவதை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய சந்தையில் வழக்கமாக காணப்படும் கூட்டத்தை விட அதிகமாக கூட்டம் அலைமோதியது. சுமார் ஒரு கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தெரிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிபடுத்தினர்.
சௌம்யா.மோ







