ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச் சந்தை : ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு விற்பனை!

ரம்ஜான் பண்டிகையொட்டி நெல்லை மேலப்பாளையம் கால்நடைச் சந்தையில் சுமார் 4 கோடி ரூபாய்க்கு அளவுக்கு ஆடுகள் விற்பனை நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் மிகவும் பிரபலமான கால்நடை சந்தையாக மேலப்பாளையம் கால்நடை சந்தை…

ரம்ஜான் பண்டிகையொட்டி நெல்லை மேலப்பாளையம் கால்நடைச் சந்தையில் சுமார் 4 கோடி ரூபாய்க்கு அளவுக்கு ஆடுகள் விற்பனை நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் மிகவும் பிரபலமான கால்நடை சந்தையாக மேலப்பாளையம் கால்நடை சந்தை இருந்து வருகிறது. வாரத்தில் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் திருநெல்வேலி சுற்று வட்டாரப்பகுதிகள், ஆலங்குளம், தென்காசி, தூத்துக்குடி விருதுநகர் ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஆடுகளை விவசாயிகளும் வியாபாரிகளும் கொண்டு வந்து இங்கு விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

ரமஜான் பண்டிகை மற்றும் சித்திரை மாத கோவில் திருவிழாக்கள் அதிகம் இருப்பதால்
மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் அமோகமாக விற்பனை செய்யப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் இங்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

இன்று அதிகாலையிலிருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களும் பொதுமக்களும் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை வாங்கி சென்றுள்ளனர். இதனால் ஆடு விற்பனையானது 4 கோடி ரூபாய் அளவுக்கு இருந்ததாக வியபாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள பாம்புகோயில் ஆட்டுச் சந்தையானது மிகவும் பிரபலமான ஆட்டுச் சந்தைகளில் ஒன்றாகும். தென் மாவட்டங்களில் உள்ள சந்தைகளில் கோடி கணக்கில் விற்பனை நடைபெறும்
சந்தைகளில், ஒன்றான பாம்பு கோயில் ஆட்டுச் சந்தையில் வாரம் தோறும்
செவ்வாய்க்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம்.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்று வரும் இந்த சிறப்பு ஆட்டு சந்தையில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டு போட்டிப் போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கி வருகின்றனர். இந்த ஆட்டு சந்தையில் சுமார் ஒரு கோடிக்கு மேல் வருமானம் வரக்கூடும் என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு ஆடு ரூ.8000 முதல் 20 ஆயிரம் வரை விற்பனையாகி வரும் சூழலில், வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.