ரூபாய் நோட்டுகளில் தலைவர்களின் படம்: ரிசர்வ் வங்கி பதில்

ரூபாய் நோட்டுகளில் மற்ற சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் படத்தையும் அச்சிட வேண்டும் என தமிழகத்தைச் சேர்ந்த நித்தியானந்தம் என்பவர் அளித்த பரிந்துரைக்கு, ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி பதிலளித்துள்ளது. கடந்த சில…

ரூபாய் நோட்டுகளில் மற்ற சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் படத்தையும் அச்சிட வேண்டும் என தமிழகத்தைச் சேர்ந்த நித்தியானந்தம் என்பவர் அளித்த பரிந்துரைக்கு, ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி பதிலளித்துள்ளது.

கடந்த சில நாட்களாக ரூபாய் நோட்டுகளில் அப்துல்கலாம் உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படத்தை அச்சிட வேண்டும் என டெல்லி ஐ.ஐ.டி. பேராசிரியர் ஒருவர் கொடுத்த பரிந்துரையின் பேரில் ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருவதாக தகவல்கள் உலவி வருகின்றன. இதனை ஆர்.பி.ஐ.யும் மறுத்திருந்த நிலையில், தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நித்தியானந்தம் என்பவர்தான் அந்த பரிந்துரையை அனுப்பியது தெரியவந்துள்ளது.

சுதந்திரத்திற்காகப் போராடிய மற்ற தலைவர்களின் புகைபப்டத்தையும் அச்சிட வேண்டும் என வெளிநாட்டு பணத்துடன் ஒப்பிட்டு ஆதாரப்பூர்வமாக ரிசர்வ் வங்கிக்கு 149 பக்கங்கள் கொண்ட பரிந்துரையை நித்யானந்தம் அனுப்பியிருக்கிறார். இந்த பரிந்துரையைப் பெற்றுக் கொண்ட ரிசர்வ் வங்கி அவருக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளதோடு, இதுகுறித்து ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என கூறியுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.