சதம் விளாசிய கில், சுதர்சன் – சிஎஸ்கே அணிக்கு 232 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்தது குஜராத் அணி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி  ரன்கள் இலக்கு நிர்ணயத்துள்ளது. 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கி பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது.…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி  ரன்கள் இலக்கு நிர்ணயத்துள்ளது.

2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கி பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை 58 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் 11 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றி பெற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் 2வது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 3 வது இடத்திலும் உள்ளது.

இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று 59-வது லீக் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்த போட்டிக்காக டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. எனவே குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. முதலில் ஷுப்மன் கில், சாய் சுதர்சன் களமிறங்கினர். 5 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 46 ரன்கள் சேர்த்தது. 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 107 ரன்கள் சேர்த்தது. 15 ஓவர்கள் முடிவில் 190 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்கள் இருவரும் 90 ரன்களைக் கடந்தனர்.

கில் 50 பந்துகளில் தனது சதத்தினை எட்டி சிறப்பாக விளையாடினார். 50 பந்துகளில் சாய் சுதர்சன் தனது சதத்தினை எட்டினார். 17 ஓவர்கள் முடிவில் 209 ரன்கள் குவித்துள்ளது. 51வது பந்தில் சுதர்சன் 103 ரன்கள் எடுத்தநிலையில், தேஷ்பாண்டே பந்தில் விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து, 55 பந்துகளில் கில் 104 ரன்கள் எடுத்தநிலையில் ஆட்டமிழந்தார்.

கடைசி பந்தில் ஷாருக்கான் ஆட்டம் இழந்தார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ரன்களை குஜராத் டைட்டன்ஸ் அணி எடுத்தது. டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். எனவே சென்னை அணிக்கு 232 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.