சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடைபெற்ற பராசக்தி பட சிறப்பு கண்காட்சி திறப்பு விழாவில் இயக்குனர் சுதா கொங்கரா, நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசுகையில் ‘‘திறமை இருந்தால் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதற்கு நான் உதாரணம். இந்த படத்தில் டான்ஸ் மாஸ்டர் கொஞ்சமாக ஸ்டெப் கொடுத்தார். ஸ்ரீலீலா அளவுக்கு தரலை. நாங்க கல்லூரியில் இருந்து பார்த்த ஹீரோ ரவிமோகன். அவர் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். அதற்கு தனி மனசு வேணும். அவரை நாங்க செட்டில் ஹீரோவாக பார்க்கிறோம். அதனால் தான் அவர் பெயரை படத்தில் முதலில் போடுகிறோம், அவர்தான் சீனியர்.
ஜி.வி.பிரகாஷுக்கு இது 100வது படம். அவருக்கு வாழ்த்துகள். ஜி.வி.பிரகாஷ் சின்ன குழந்தையில் இருந்து இசை அமைக்கிறாரா? என்று என் அம்மா கேட்டார். மியூசிக் டைரக்டர் என்றால் ஒரே நேரத்தில் 10, 15 படங்கள் பண்ணலாம் என்றேன். அவரை பற்றி ஆடியோ லான்சில் பேசுகிறேன். இந்த படம் எனக்கு 25 வது படம். முதலில் வேறு படம் பண்ணுவதாக இருந்தது. ஆனால், ஆகாஷ்பாஸ்கரன் இதை பண்ண சொன்னார். இந்த படம் கிடைத்தது அந்த பராசக்தி அருள்தான், இந்த கண்காட்சி நன்றாக இருக்கும். இரண்டரை மணி நேரம் 1960களுக்கு இந்த படம் அழைத்து செல்லும். இந்த படம் பாசம், வீரம், புரட்சியை பேசுகிறது. இந்த பொங்கலுக்கு நல்ல அனுபவத்தை தரும். இந்த கண்காட்சியை நேரம் இருந்தால் பாருங்க.
1960களில் நடந்த ஒரு விஷயத்தை சுற்றி இயக்குனர் கூறியிருக்கிறார். இந்த படம் பண்ண முக்கியமான காரணம் இயக்குனர் சுதா. அவருக்கு பின் தான் இந்த கதை. அவர் இந்த கதையை 4 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து இருக்கிறார். ஒரு டிகிரி மாதிரி அதுக்கு வேலை செய்து இருக்கிறார். இந்த படம் பண்ணுவது தனி சவால், தலைவர் சொன்ன மாதிரி, சோதனையை சந்தித்தாதல்தான் சாதனை. இந்த படத்தை தயாரித்ததற்கு நன்றி. இப்ப படம் எடுப்பது மட்டுமல்ல, மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் முக்கியம்.
இந்த படத்தில் நடித்தவர்களை இப்ப கொஞ்சம் பேசிவிடுகிறேன். இல்லாவிட்டால், அழகாக பேசிய ஜெயம்ரவி, பேசாத சிவானு போட்டு விடுங்க. இந்த படத்துல அதர்வா சகோதரர் மாதிரி. அவரின் முதல் பட பிரமோஷனுக்காக அது இது எது ஷோவுக்கு அப்பாவுடன் வந்தார். அதை நான் தொகுத்து வழங்கினேன். அதெல்லாம் மறக்க முடியாத அனுபவம் என்று தெரிவித்துள்ளார்.







