#BloddyBegger படத்தின் ‘பெக்கர் வாலா’ பாடல் வெளியானது!

கவின் நடிக்கும் பிளடி பெக்கர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘பெக்கர் வாலா’ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் கவின். லிப்ட், மற்றும் டாடா திரைப்படங்கள் கவினுக்கு வெற்றி திரைப்படங்களாக…

Kavin ,BloddyBegger ,Begger Wala, song ,released

கவின் நடிக்கும் பிளடி பெக்கர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘பெக்கர் வாலா’ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் கவின். லிப்ட், மற்றும் டாடா திரைப்படங்கள் கவினுக்கு வெற்றி திரைப்படங்களாக மாறி இருக்கிறது. அவரது ‘டாடா’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் ‘ஸ்டார்’ திரைப்படத்தில் நடித்தார். ஸ்டார் திரைப்படம் கடந்த மே திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

‘ஸ்டார்’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனரான நெல்சன் திலிப்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கத்தில் ‘ப்ளடி பெக்கர்’ என்ற திரைப்படத்தில் கவின் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் 31ம் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் டீசர், டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இதையும் படியுங்கள் : ரூ.345.78 கோடி மதிப்பீட்டில் பெரம்பலூர் நகராட்சி, தொழிற்பூங்காக்களுக்கு குடிநீர் திட்டம்!

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்திற்கு தணிக்கை குழு யூ/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. படத்தின் நீலம் 2 மணி நேரம் 30 நிமிடங்களாகும். படத்தின் ப்ரோமோ பாடலான ‘பெக்கர் வாலா’ பாடல் இன்று வெளியாகியுள்ளது. முன்னதாக, இதுக்குறித்து வெளியிட்ட போஸ்டரில் படத்துல இந்த பாட்டு வராது! என நகைச்சுவை பாணியாக அறிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.