முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

ஆலந்தூரில் ரவுடிகள் கோஷ்டி மோதல்; பெட்ரோல் குண்டுகளை வீசிய 10க்கும் மேற்பட்டோர் கைது

சென்னையை அடுத்த ஆலந்தூரில் இரண்டு ரவுடிகள் கோஷ்டி மோதலில் பெட்ரோல் குண்டுகளை வீசிய 10க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையை அடுத்த ஆலந்தூர் ஆபிரகாம் தெருவில் நேற்று இரவு 8 மணியளவில் 20 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் வந்தது. அங்கு நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை அடித்து நொறுக்கியது. பின்னர் அந்த கும்பல் ஆபிரகாம் தெருவில் உள்ள ஒரு ஜீவசமாதி மடத்தில் பெட்ரோல் குண்டை வீசியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுகுறித்த தகவல் அறிந்ததும், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வந்தபோது அங்கு நின்றிருந்த நவீன்(28), தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்யும் சபீக், அபுபக்கர் ஆகியோரை வெட்டி விட்டு கும்பல் தப்பி சென்றது. பிடிக்க வந்த ரோந்து போலீசார் மீதும் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசார் நடத்திய விசாரணையில், ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நாகூர் மீரான் தலைமையில் ஒரு ரவுடி கோஷ்டியும், ராபின்சன் தலைமையில் ஒரு கோஷ்டியும் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு நாகூர் மீரானை ராபின்சன் கோஷ்டி கொலை செய்தது. இதனால் ராபின்சனை கொலை செய்ய நாகூர் மீரான் தரப்பு சுற்றி வந்தது.

இந்நிலையில் நேற்று மாலை ராபின்சன் தங்கை ஷெரின் தனது நண்பர் அணில்(22)
என்பவருடன் கிண்டி மடுவின்கரை அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது, 2 பேர் வழிமடக்கி அணிலை தங்களுடன் அழைத்து சென்றனர். பின்னர் அணிலை தாக்கி பள்ளிக்கரணை கைவேலி பகுதியில் விட்டு சென்றனர். இரவு வீடு திரும்பிய அணில் தன்னை தாக்கியதை ஷெரினிடம் கூறியுள்ளார். ஷெரின் தனது அண்ணன் ராபினிடம் கூற அவரது ரவுடி கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் ஆலந்தூர் ஆபிரகாம் தெருவில் பெட்ரோல் குண்டுகளை வீசி ரகளை செய்துள்ளது.

இதனையடுத்து ஆதம்பாக்கம் அம்பேத்கார் நகரில் பதுங்கி இருந்த ரவுடி ராபின்சன் கோஷ்டியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த பரங்கிமலை போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆயிரம் விளக்கு தொகுதியின் அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும் – குஷ்பு வாக்குறுதி

Gayathri Venkatesan

மாணவர்களை அழைத்துவந்த 90 விமானங்கள்!

G SaravanaKumar

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி இன்று முழு அடைப்பு போராட்டம்

EZHILARASAN D