கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற மாசிமக பிரமோற்சவ தீர்த்தவாரி!

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில், மாசிமக பிரமோற்சவ தீர்த்தவாரி வெகு விமரிசையாக  நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாள் வழிபாடு செய்தனர். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில்,…

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில், மாசிமக பிரமோற்சவ தீர்த்தவாரி வெகு விமரிசையாக  நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாள் வழிபாடு செய்தனர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில், மாமன்னன் ராஜேந்திர சோழன் கங்கை வரை படையெடுத்து வெற்றி பெற்றதன் அடையாளமாக கட்டப்பட்டது ஸ்ரீபிரஹன்நாயகி அம்பாள் சமேத ஸ்ரீபிரகதீஸ்வரர் கோயில். யுனெஸ்கோவால் உலக புராதான சின்னமாக அறிவிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் மாசிமக பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறும்.
அண்மையில் கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த ஆண்டு மாசிமக பிரமோற்சவ விழாவின் 10 ம் நாளான நேற்று மாசிமக தீர்த்தவாரி வெகு விமரிசையாக நடைபெற்றது. கோயிலில் இருந்து உற்சவ மூர்த்திகளான சுவாமி – அம்பாள், கோயில் குளத்திற்கு முன்பு எழுந்தருளிய பின், குளத்தில் தீர்த்தவாரி வைபவம் நடைபெற்றது. இதன்பின்னர், பக்தர்கள் புனித நீராடி சுவாமி அம்பாளைத் தரிசனம் செய்தனர். தீர்த்தவாரி நிகழ்ச்சி முடிந்த பின் சுவாமி அம்பாளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
– சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.