உடலில் கட்டி கொண்டு வரப்பட்ட ரூ.68 லட்சம் ஹவாலா பணம்- இருவர் கைது

உடல் முழுவதும் கட்டி கொண்டு வந்த ரூ.68 லட்சம் ஹவாலா பணத்தை கையும் களவுமாக பிடித்த ரயில்வே போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கோவை – மும்பை இடையே இயக்கப்படும் லோக்மானிய திலக்…

உடல் முழுவதும் கட்டி கொண்டு வந்த ரூ.68 லட்சம் ஹவாலா பணத்தை கையும் களவுமாக பிடித்த ரயில்வே போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கோவை – மும்பை இடையே இயக்கப்படும் லோக்மானிய திலக் விரைவு வண்டி நேற்று மாலை பெரம்பூர்‌ ரயில்‌நிலையம் வந்தடைந்தது.  அப்போது அதில் இரண்டு பேர் சந்தேகத்திற்கு இடமான வகையில் இரயில் நிலையத்தில் இறங்கியுள்ளனர்.

அந்த இரண்டு நபர்களையும் சோதனை செய்த ரயில்வே போலீசார் அவர்களது சட்டையின் உள்பக்கத்தில் ஒருவரிடம் ரூ.35 லட்சமும் மற்றொருவரிடம் ரூ.33 லட்சமும் இருப்பதையும் கண்டுபிடித்தனர்.

இதனையும் படியுங்கள்: தந்தையால் பாலியல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளானேன் – நடிகை குஷ்பு

இருவரையும் விசாரணை செய்ததில்  அவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் பெயர் சுனில் குமார் என்றும் மற்றொருவர் அப்துல் ரகுமான் என்பதும் தெரியவந்தது.

மேலும் அவர்கள் கொண்டு வந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் அவர்களையும் , அவர்கள் கொண்டு வந்த 68 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.