சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் கத்திமுனையில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக 6 பேரிடம் போலீசாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுகோட்டை, சுங்குவார்சத்திரம், ஒரகடம்,
மாம்பாக்கம், வல்லம்-வடகால் ஆகிய பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா
அமைந்துள்ளது. இங்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆண், பெண் தொழிலாளர்கள் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பகுதியில் வாடகை வீட்டில் தங்கி மேற்கண்ட சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த தொழிற்சாலைகளில் அதிகளவு பெண்கள் வேலை செய்கின்றனர். இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி இரவு தமிழக காவல்துறை கட்டுபாட்டில் உள்ள காவலன் செயலியில் இளம் பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார்.
அதில் வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்த அந்த இளம்பெண்
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தங்கி அதேபகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில்
வேலை செய்து வருவதாகவும். வெங்காடு பகுதியில் உள்ள நிறுவனத்திலிருந்து வீட்டிற்கு வந்த போது அவரை பின் தொடர்ந்து வந்த இருவர் தாங்கள் போலிஸ் என கூறி, உன்மீது சந்தேகம் உள்ளது காவல் நிலையம் வந்து செல்ல வேண்டும் என்று கூறியதாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த நபர்கள் காக்கி பேண்ட், கையில் வாக்கி டாக்கி வைத்திருந்துள்ளனர். இதனால்
அவர்கள் போலிஸ் என நம்பி இளம் பெண் அவர்களுடன் பைக்கில் சென்றுள்ளார்.
அப்போது ஸ்ரீபெரும்புதூரை கடந்து செல்லவே இளம் பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டு
கூச்சலிட்டுள்ளார். அப்போது மர்ம நபர்கள் இளம்பெண்ணிடம் கத்தியை காட்டி
மிரட்டி வடமங்கலம் செல்லும் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அந்த
பெண்ணை அழைத்து சென்று இருவரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அந்த பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து அந்த பெண், காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ள காவலன் செயலியில்
புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் ஸ்ரீபெரும்புதூர் இருந்து சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, வடமங்கலம் ஆகிய பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து வாலிபர்களை தேடி வருகின்றனர்.
முன்னுக்குப் பின் முரணாக பதில்
இந்த புகார் சம்பந்தமாக ஸ்ரீபெரும்புதூர் போலிசார், காஞ்சிபுரம் மற்றும்
ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் ஆறு
பேரை விசாரணை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அளித்த அறிக்கையில் பல முறை இந்த பெண் பாலியல் உறவு கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த அறிக்கையின் படி இது தொடர்பாக போலிசார் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததாக மகளிர் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. போலீசாரை குழப்பும் இளம்பெண்
அந்த பெண்ணிடம் மகளிர் போலிசார் விசாரணை மேற்கொண்டதில் காஞ்சிபுரம் மாவட்ட தனிப்படை போலிசார் செல்போன்களில் இருந்த குற்ற செயலில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளின் யார் புகைப்படத்தை காட்டினாலும் இவர் தான் என்று
குறிப்பிடுகிறார் என்றும், இதுமட்டுமின்றி ஓய்வு பெற்ற போலிசாரின்
புகைப்படங்களை காண்பித்தாலும் இவர் தான் என்கிறார்கள் பெயர் குறிப்பிடாத மகளிர் போலிஸ்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் முன்னுக்குப் பின் முரணான தகவல்களால் 3 காவல்நிலைய போலிசாரும் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
தீவிர விசாரணை
ஏனெனில் இது காவல்நிலையத்தில் வந்த புகார் அல்ல, காவலன் செயலியில் வந்த புகார் , அந்த பெண் எப்படிபட்டவராக இருந்தாலும் புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டியது காவல்துறையினரின் கடமை. ஆகவே காவல்துறையினர் இரவு பகல் பாராது சம்பந்தப்பட்ட குற்றாவாளிகளை 6 நாட்களாக தேடி விசாரணை செய்து வருகின்றனர்
ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான தனியார் நிறுவனங்கள்
செயல்பட்டு வரும் நிலையில் இப்பகுதிகளில் தொடர்ந்து குற்ற செயல்கள் அதிகரித்து
வருகிறது, தொழிற்சாலை மிகுந்த பகுதிகளில் போலீசார் ரோந்து பணியை தீவிர
படுத்தாததால் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சமூக
ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
- பாலசுப்ரமணி வீரப்பன், ஸ்ரீபெரும்புதூர் செய்தியாளர்