பல்லடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மேளதாளங்கள் முழங்க ,வான வேடிக்கையோடு விமர்சையாக நடைபெற்ற விநாயகர் சிலைகள் ஊர்வலம்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது .நேற்றை முன்தினம் பல்வேறு பகுதிகளில் விநாயகர்
சிலைகள் வைத்து பூஜை செய்யப்பட்டும் இரண்டு நாட்கள் கழித்து நீர் நிலைகளில் கரைக்கப்படும் நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று இந்து முன்னணி சார்பில் NGR ரோட்டில் பொதுக் கூட்டம் மூலம் தொடங்கியது. இந்நிகழ்ச்சியை இந்து முன்னணி கட்சியின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தை மோகன் காவிக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
காய்கறிகளால்அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலை, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலை,இருசக்கர வாகனம் போல் காட்சியளிக்கும் விநாயகர் சிலை என 36 விநாயகர் சிலைகள் பல்வேறு வடிவங்கள் மூலம் அலங்கரிக்கப்பட்ட சிலைகளை வான வேடிக்கையோடு மேளதாளத்தோடு தொடங்கி ஊர்வலம் கொசவம்பாளையம்,மேற்கு பல்லடம்,மங்கலம் ரோடு, பட்டேல் வீதி , பச்சாபாளையம், ஜெயபிரகாஷ் வீதி, வடுகபாளையம், நால்ரோடு வழியாக சென்ற ஊர்வலம் இறுதியாக அனைத்து சிலைகளும் பிஏபி வாய்க்காலில் கரைக்கப்பட்டனர். இந்த ஊர்வலத்தில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்போடு ஊர்வலம் நடைபெற்றது .







