சென்னையில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம் – 4 இடங்களில் சிலைகளை கரைக்க ஏற்பாடு

சென்னையில் 30 சதவிகித விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட நிலையில் இன்று பிரமாண்ட ஊர்வலம் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் 1519 விநாயகர் சிலைகளும்,…

சென்னையில் 30 சதவிகித விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட நிலையில் இன்று பிரமாண்ட ஊர்வலம் நடத்தப்படுகிறது.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் 1519 விநாயகர் சிலைகளும், ஆவடி காவல் ஆணையர் அலுவலக பகுதியில் 204 சிலைகளும், தாம்பரம் சுற்று வட்டார பகுதியில் 425 சிலைகளும் வைத்து பூஜை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், பல்வேறு இந்து அமைப்பினரால் பூஜைக்காக வைக்கப்பட்ட சிலைகளை, நேற்று ஊர்வலமாக எடுத்துச் சென்று பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் உள்ளிட்ட கடற்பகுதியில் கரைத்தனர்.

இதையும் படியுங்கள் : சிவகங்கை ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி போராட்டம் – 500-க்கும் மேற்பட்டோர் கைது

சுமார் 30 சதவீத சிலைகள் கரைக்கப்பட்ட நிலையில் இன்று பிரமாண்ட ஊர்வலம் நடத்தப்படுகிறது. இந்த ஊர்வலத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று விடாமல் தடுப்பதற்காக தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.