சீனாவில் கோலாகலமாக தொடங்கிய 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள்…!

19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கின. 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக ஒரு…

19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கின.

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக ஒரு ஆண்டு தள்ளி வைக்கப்பட்டது. அக்டோபர் மாதம் 8-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியின் தொடக்க விழா சீனாவின் ஹாங்சோவ் நகரில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. இதில், சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்துகொண்டு ஆசிய போட்டிகளை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் தேசிய கொடியை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது, இந்திய ஆக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், உலக குத்துச்சண்டை சாம்பியன் லல்வினா போர்கோஹைன் ஆகியோர் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி சென்றனர். அவர்களை தொடர்ந்து இந்திய வீரர்கள் அணி வகுத்து சென்றனர். அப்போது, இந்திய பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பெண் வீராங்கனைகள் புடவை அணிந்து கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.