விநாயகர் சதுர்த்தி பண்டிகை; தலைவர்கள் வாழ்த்து

விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி மத்திய அமைச்சர் எல்.முருகன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  இந்துக்களின் முக்கிய பண்டிகைளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும்  கோலாகலமாக…

விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி மத்திய அமைச்சர் எல்.முருகன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

இந்துக்களின் முக்கிய பண்டிகைளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும்  கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் முழுமுதுற் கடவுள் விநாயகர் அவதரித்த நாளை அனைவரும் விநாயகர் சதுர்த்தி என்று வெகு சிறப்பாக வருடம்தோறும் கொண்டாடி வருகிறோம். இத்திருநாளில் அனைத்து விநாயகர் ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்துக்கள் தங்கள் இல்லங்களில் விநாயகருக்கு பூஜை செய்து சுண்டல், கொழுக்கட்டை போன்ற பதார்த்தங்களை படைத்து வழிபடுவர். அனைத்து நல்ல காரியங்களுக்கும் முழுமுதற் கடவுளான விநாயகரை சதுர்த்தி திருநாளில் வழிபடுவது மேலும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், இந்நாளில் அனைவரின் வாழ்விலும் சங்கடங்களும், தடைகளும் நீங்கி, இல்லந்தோறும் இன்பமும், மகிழ்ச்சியும் வினை தீர்க்கும் விநாயகரின் அருளால் பரிபூரணமாக கிடைக்கட்டும். அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,  விநாயகர் சதுர்த்தி நன்னாளில் வேண்டுவோர்க்கு வேண்டிய வரத்தைக் கொடுக்கும் கடவுளாகக் கருதப்படும் வேழமுகத்து விநாயகப் பெருமானின் அருளால் அனைவருக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிட்டட்டும். அன்பும், அமைதியும் நிலவட்டும், நாடெங்கும் நலமும், வளமும் பெருகட்டும், ஒற்றுமை ஓங்கட்டும், இல்லந்தோறும் இன்பமும், மகிழ்ச்சியும், பொங்கட்டும் என்று வாழ்த்தி அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

தமாக தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், விநாயகர் சதுர்த்தி நாளில் தீமைகள் விலகி, நம்மைகள் பெறவும் , எல்லோரும் எல்லா வளமும். நலனும் பெற்று வாழ தமிழக மக்கள் அனைவருக்கும் த.மா.கா சார்பில் வாழத்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.