விநாயகர் சதுர்த்தி; குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து

விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்துக்களின் முக்கிய பண்டிகைளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும்  கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் முழுமுதுற்…

விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்துக்களின் முக்கிய பண்டிகைளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும்  கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் முழுமுதுற் கடவுள் விநாயகர் அவதரித்த நாளை அனைவரும் விநாயகர் சதுர்த்தி என்று வெகு சிறப்பாக வருடம்தோறும் கொண்டாடி வருகிறோம். இத்திருநாளில் அனைத்து விநாயகர் ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்துக்கள் தங்கள் இல்லங்களில் விநாயகருக்கு பூஜை செய்து சுண்டல், கொழுக்கட்டை போன்ற பதார்த்தங்களை படைத்து வழிபடுவர். அனைத்து நல்ல காரியங்களுக்கும் முழுமுதற் கடவுளான விநாயகரை சதுர்த்தி திருநாளில் வழிபடுவது மேலும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

வட இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையான கணேஷ் சதுர்த்தியாக வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இதையொட்டி நாடு முழுவதும் உள்ள இந்து ஆலயங்கள், விநாயகர் ஆலங்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடக்கும்.

விநாயகர் சதுர்த்திக்கு குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். குடியரசு தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், விநாயக சதுர்த்தி அன்று நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். விக்னஹர்த்தா மற்றும் மங்களமூர்த்தி விநாயகர் அறிவு, சாதனை மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் சின்னங்கள் ஆகும். ஸ்ரீ கணேசனின் ஆசீர்வாதத்துடன், அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றின் தொடர்பு இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், விநாயகர் சதுர்த்தி திருநாளில் கருணை மற்றும் சகோதரத்துவம் எப்போதும் மேலோங்கட்டும். ஞானம் என்பது முக்தியை விரும்புபவருக்கு அறியாமையை அழிப்பதாகும். செல்வம் பக்தனுக்குத் திருப்தி அளிக்கிறது. யாரிடமிருந்து தடைகள் அழிகிறதோ, யாரிடமிருந்து காரியம் நிறைவேறுகிறதோ, அந்த விநாயகரை எப்போதும் கும்பிட்டு வணங்குகிறோம். விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள். விநாயகப் பெருமானின் அருள் எப்போதும் நம் மீது இருக்கட்டும் என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.