‘ஜெய் ஹனுமான்’ படத்தில் இணையும் ‘காந்தாரா’ நடிகர்?

‘ஹனுமான்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ஜெய் ஹனுமான் படத்தில் ரிஷப் ஷெட்டி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் ‘ஹனுமான்’.…

‘ஹனுமான்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ஜெய் ஹனுமான் படத்தில் ரிஷப் ஷெட்டி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் ‘ஹனுமான்’. இத்திரைப்படத்தை பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரித்திருந்தது. இத்திரைப்படத்தில் அம்ரிதா ஐயர், வினய் ராய், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

‘ஹனுமான்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானீஸ் உள்ளிட்ட உலக மொழிகளிலும், பான்- வேர்ல்ட் திரைப்படமாக வெளியானது. இத்திரைப்படத்தை பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸ் (பிவிசியு) ஆக உருவாக்கினார்.

இதன் அடுத்த பாகம் உருவாகி வருகிறது. இந்தப் படத்துக்கு ‘ஜெய் ஹனுமான்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் ரிஷப் ஷெட்டி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.