நடமாடும் மளிகைக் கடைகளுக்கான பாஸ் இன்று முதல் மண்டல அலுவலகங்களில் வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகப் பேட்டியளித்த அவர்,“ சென்னையில் 7 ஆயிரம் நடமாடும் வாகங்கள் மூலம் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்டும். இது தொடர்பாக வணிகர் சங்க நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனையின் படி இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கையால் சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வருவதாகக் தெரிவித்தார்.







