முக்கியச் செய்திகள் தமிழகம்

காய்கறி வேண்டுமா? இந்த எண்ணுக்கு அழையுங்கள்!

நடமாடும் காய்கறி வாகனங்கள் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி மற்றும் வணிகர் சங்க பேரமைப்பு சார்பாக ஆயிரம் நடமாடும் காய்கறி வாகனங்கள் சேவையை கே.கே. நகர், சிவன் பூங்கா அருகே இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை மாநகராட்சியின் நடவடிக்கைகளை பிரதமர் பாராட்டியிருப்பதை சுட்டிக்காட்டினார். அன்றாட மாற்றத்தின் அடிப்படையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதாகவும், அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, “மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள காய்கறி வாகனங்கள் வராத பகுதி குறித்து மக்கள் 044- 45680200 என்ற எண்ணிற்கு அழைத்து சென்னை மாநகர கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினார். காய்கறி வாகனங்கள் அந்தந்த பகுதிகளுக்கு வர நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Advertisement:

Related posts

”அதிமுக ஆட்சிக் கட்டிலில் அமர்வதை யாராலும் தடுக்க முடியாது”- அமைச்சர் செங்கோட்டையன்!

Jayapriya

3.2 கோடி இந்திய மக்களை வறுமைக்குத் தள்ளிய கொரோனா!

Gayathri Venkatesan

“விண்வெளி ஆய்வு துறையின் உற்பத்தி மையமாக இந்தியா விரைவில் உருவெடுக்கும்” – பிரதமர் மோடி

Jeba