ராஜஸ்தானில் மருத்துவ தம்பதியினர் சுட்டுக் கொலை!

ராஜஸ்தானில் மருத்துவ தம்பதியினர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த மருத்துவ தம்பதிகள் சுதீப் குப்தா அவரது மனைவி சீமா குப்தா. இவர்கள் ஜெய்ப்பூரில் உள்ள பாரத்பூரில் காரில் சென்று…

ராஜஸ்தானில் மருத்துவ தம்பதியினர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானை சேர்ந்த மருத்துவ தம்பதிகள் சுதீப் குப்தா அவரது மனைவி சீமா குப்தா. இவர்கள் ஜெய்ப்பூரில் உள்ள பாரத்பூரில் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் காரில் சென்று கொண்டிருந்த அவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பினர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த, சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில், கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில், கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை சம்பவத்திற்கு பழிக்குப் பழியாக, மருத்துவ தம்பதியர் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.