புதுச்சேரியில் ஜி-20 மாநாட்டின் கலந்தாய்வு கூட்டம் தொடக்கம்

ஜி20 மாநாட்டின் கலந்தாய்வு கூட்டம் இன்று புதுச்சேரியில் தொடங்கியது. சர்வதேச அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஜி-20 அமைப்புக்கு இந்த முறை இந்தியா தலைமை ஏற்றுள்ளது. ஜி-20 குழுவின் 18வது மாநாடு வருகிற செப்டம்பர்…

ஜி20 மாநாட்டின் கலந்தாய்வு கூட்டம் இன்று புதுச்சேரியில் தொடங்கியது.

சர்வதேச அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஜி-20 அமைப்புக்கு இந்த முறை இந்தியா தலைமை ஏற்றுள்ளது. ஜி-20 குழுவின் 18வது மாநாடு வருகிற செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளை மத்திய அரசு செய்துவருகிறது. இந்நிலையில் ஜி-20 மாநாடு நடைபெறுவதற்கு முன்னதாக அதன் துணை கூட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடக்கவுள்ளன.

அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் ஜி-20 மாநாட்டின் ஆரம்பக்கட்ட கூட்டம் தொடங்கியுள்ளது. இந்தக்கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கி 6 மணிக்கு நிறைவடையும். இந்த மாநாட்டில் ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, யூரோப் யூனியன், பிரான்ஸ் உள்ளிட்ட 11 நாடுகளை சேர்ந்த 15 வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இந்திய தேசிய அறிவியல் அககாடமியின் தலைவர் அசுதோஷ் சர்மா தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகிறது. நட்பு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.

கடந்தாண்டு ஜி-20 மாநாடு நடத்திய இந்தோனேசியா, நடப்பு ஆண்டு தலைமை பொறுப்பேற்றுள்ள இந்தியா, அடுத்த ஆண்டு தலைமை பொறுப்பேற்கவுள்ள பிரேசில் நாடுகளின் தலைமை விஞ்ஞானிகள் உரையுடன் மாநாடு தொடங்குகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.