சிறந்த இசையமைப்பாளருக்கன தேசிய விருது பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்..!

டெல்லியில் நடந்து வரும் 71 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த இசையமைப்பாளருக்கன தேசிய விருது ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு வழங்கப்படடது.

டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 71 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் தேசிய விருதுகள் பெற்ற கலைஞர்களுக்கு குடியசுத்தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி வருகிறார்.

அந்த வகையில்,சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் வாத்தி படத்தில் பாடல்கள் அமைத்ததற்காக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு விருதினை வழங்கினார்.

தெலுங்கு பட இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கிய வாத்தி திரைப்படத்தில் தனுஷ் – சம்யுக்தா நடித்திருந்தனர். இது ஜி.வி. பிரகாஷின்  இரண்டாவது தேசிய விருது  ஆகும்.  இதற்கு முன்பு சூரரைப் போற்று படத்திற்கு தேசிய விருது பெற்றுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.