வாடிவாசல் படத்திற்கான இசையமைப்புப் பணிகளை தொடங்கிய ஜி.வி.பிரகாஷ்!

‘வாடிவாசல்’ திரைப்படத்திற்கான பாடல் இசையமைப்புப் பணிகள் தொடங்கியதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ரெட்ரோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் மே 1ம் தேதி வெளியாகி உள்ளது. சூர்யா தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ‘சூர்யா 45’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்து வருவதாக கூறப்படுகிறது.

Is this the heroine of the movie #Vaadivaasal?

இதற்கிடையே, இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ என்ற படத்தை இயக்குகிறார்.அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்காமல் தாமதமாகி கொண்ட போகின்றன.

‘சூர்யா 45’ படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர் சூர்யா ‘வாடிவாசல்’ படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி ஹீரோயினாக நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த நிலையில், ‘வாடிவாசல்’ திரைப்படத்திற்கான பாடல் இசையமைப்புப் பணிகள் தொடங்கியதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.