கிடப்பில் மழைநீர் வடிகால் பணிகள் – ஜி.கே.வாசன்

திமுக அரசு பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றாதது போல் மழைநீர் வடிகால் பணிகளையும் கிடப்பில் போட்டிருக்கின்றன என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் போதை பொருட்களின்…

திமுக அரசு பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றாதது போல் மழைநீர் வடிகால் பணிகளையும் கிடப்பில் போட்டிருக்கின்றன என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் போதை பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது தமிழக அரசின் கடமை. அதை ஏன் உங்களால் தடுக்க முடியவில்லை? ஏன் இந்த இயலாமை? எதற்காக மாணவர்கள் கெட்டுப் போகும் சூழல் ஏற்பட வேண்டும்? என கேள்வி எழுப்பிய ஜி.கே.வாசன், இதுபோன்ற சூழல் ஏற்படாதவாறு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் தமிழக மீனவர்களை நேற்றைய தினம் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதனை மத்திய அரசு விரைந்து செயல்பட்டு அவர்களை மீட்க வலியுறுத்துகிறேன் எனக் கூறிய ஜி.கே.வாசன், மத்திய அரசு இலங்கை அரசோடு கண்டிப்போடு பேசி இதற்கான தீர்வை காண வேண்டும் என கூறினார்.

திமுக அரசு பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றாதது போல் மழைநீர் வடிகால் பணிகளையும் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றனர். மேலும், மழைக்காலம் வருவதனால் தமிழக அரசு தயவு கூர்ந்து விழித்திருக்க வேண்டும் எனவும், மக்களுக்கு வரும் நாட்களிலே சிரமங்களை ஏற்படாதவாறு இந்த பணிகளை செய்து முடித்திட வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.