முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

குஜராத்தி படம் ஆஸ்கருக்கு பரிந்துரை!

இந்தியா சார்பில் இந்தாண்டிற்கான ஆஸ்கர் விருதுக்கு குஜராத்தி படமான ’செலோ ஷோ’ திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

95-வது ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் அனுப்பப்படவுள்ள திரைப்படத்தை அறிவிக்கும் விதமாக பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை அண்ணா சாலையில் உள்ள தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் இந்திய திரைப்பட சங்கத்தின் தேர்வு குழுவினர் பங்கு கொண்டு தேர்வு செய்த படத்தினை அறிவித்தனர்.
கன்னட இயக்குனர் டி.எஸ். நாகாபரண தலைமையில் 17 பேர் கொண்ட தேர்வுக் குழுவினர் மொத்தம் 13 படங்களை பார்த்து ஒரு படத்தை தேர்வு செய்துள்ளனர். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் போட்டிக்கு இந்தியா சார்பில் பல சிறந்த படைப்புகளில் இருந்து ஒருமனதாக ஆஸ்கர் விழாவிற்கு செலோ ஷோ என்ற குஜராத்தி திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


இது குறித்து தயாரிப்பாளர் ரவி கொட்டாரகரா கூறியது, இந்திய சார்பில் வருடத்திற்கு 4000 முதல் 5000 படங்கள் எடுக்கப்படுகிறது. மிக சிறந்த கதைகள், படைப்புகள் இக்காலத்தில் எடுக்கப்பட்டுகின்றன. 1929 ல் ஆஸ்கர் விருது விழா துவங்கப்பட்டது. ஆனால், அப்போது வெளிநாட்டு படங்கள் ஏற்காத நிலை இருந்தது. இப்போது இந்த நிலை மாறியுள்ளது. ஆஸ்கருக்கு இந்தியாவில் இருந்து தரமான படங்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இப்படம் வாழ்வில் சினிமாவின் அருமையை சொல்வது மட்டுமின்றி ஒவ்வொரு திரைப்பட ரசிகனின் உணர்வுகளை கூறும் சிறந்த படைப்பாக உருவாகியுள்ளது. இப்படம் இந்திய மரபையும், பாரம்பரியங்களையும் நுட்பமாகவும் உண்மையாகவும் வெளிப்படுத்துகிறது, இது வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு இந்தியாவின் முகத்தை காட்டுவதாக அமைந்துள்ளது என்றார்.

பிறகு, கன்னட இயக்குனர் டி.எஸ்.நாகாபரண கூறியது, ஆஸ்கர் விருது தேர்வுக்கு 13 படங்கள் பரிந்துரைக்கப்பட்டது. பல மொழிகளில் இருந்து பல சிறந்த திரைப்படங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக குஜராத்தி திரைப்படம் ‘செலோ ஷோ’ (தி லாஸ்ட் ஷோ) படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. FFI சார்பாக அகாடமி விருதுகளுக்கு வெளிநாட்டு மொழிப் பிரிவில் நுழைவதற்கான இந்தியத் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. 2022 ஆம் ஆண்டுக்கான அகாடமி விருதுகளுக்கான வெளிநாட்டு மொழிக்கான இந்திய ஆஸ்கார் நுழைவுத் தேர்வைத் தேர்ந்தெடுத்ததற்காக டி.எஸ். நாகபரண ஜூரி வாரியத்தின் சார்பாக கௌரவிக்கப்பட்டார். பல சிறந்த படைப்புகளில் இருந்து ஒருமனதாக ஆஸ்கர் விழாவிற்கு ‘செலோ ஷோ’ (லாஸ்ட் ஃபில்ம் ஷோ) என்ற தலைப்பில் படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் புதிதாக 26,964 பேருக்கு கொரோனா : 383 பேர் உயிரிழப்பு

EZHILARASAN D

மதுரை அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோயிலில் ஆடித் திருவிழா திருத்தேரோட்டம் தொடங்கியது

Arivazhagan Chinnasamy

சாலையின் நடுவே மின் கம்பங்கள்; விபத்து ஏற்படும் அபாயம்

EZHILARASAN D