“புதிய கல்வி கொள்கைக்கு உட்பட்டால் தமிழ்நாட்டிற்கு நிதி விடுவிக்கப்படும்” – மத்திய அமைச்சர் திட்டவட்டம்!

புதிய கல்வி கொள்கை சட்டத்திற்கு உட்பட்டால் தமிழ்நாட்டிற்கு நிதி விடுவிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர்  தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் காசி இடையிலான வரலாற்று தொடா்புகளை வலுப்படுத்தும் வகையில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 3ம் ஆண்டு காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி இன்று (பிப்.15) முதல் பிப். 24ம் தேதி வரை வாரணாசியில் நடைபெறவுள்ளது.

இதையும் படியுங்கள் : பத்ம விருதாளர்களுக்கு ஆளுநர் மாளிகையில் பாராட்டு விழா – நடிகர் அஜித் குமார் பங்கேற்கவில்லை!

3ம் ஆண்டு காசி தமிழ்ச் சங்கமத்தை உத்தரப்பிரதே முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் தொடங்கி வைத்து உரையாற்றினர்.  பின்பு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,

“தமிழ்நாடு மட்டும் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பது ஏன்? புதிய கல்வி கொள்கையை ஏற்காததால் நிதி விடுவிக்க சட்டத்தில் இடமில்லை. தமிழ்நாடு அரசு அரசியல் உள்நோக்கத்தாலே ஏற்க மறுக்கிறது. நிதி நிலுவையில் இருப்பது எனக்கு நன்றாகவே தெரியும். தமிழ்நாடு அரசு புதிய கல்வி கொள்கை தொடர்பான சட்டத்திற்கு உட்பட்டால் நிதி விடுவிக்கப்படும்”

இவ்வாறு மத்திய கல்வி அமைச்சர்  தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.