தமிழகத்தில் மேலும் 3 கோயில்களில் முழு நேர அன்னதான திட்டம்; முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வர் உள்ளிட்ட 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள சில குறிப்பிட்ட கோவில்களில் முழுநேர அன்னதான…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வர் உள்ளிட்ட 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள சில குறிப்பிட்ட கோவில்களில் முழுநேர அன்னதான திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில், திருவரங்கம் அரங்கநாதசுவாமி கோவில், திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் ழுழுநேர அன்னதான திட்டம் செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மேலும் 3 கோயில்களில் முழுநேர அன்னதான திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ஆகியவற்றில், நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகம் முதலமைச்சர் அலுவலக வளாகத்தில், போக்குவரத்துத் துறை சார்பில் அரசு தானியங்கி பணிமனைகள் இல்லாத இடங்களில் அரசுத் துறை வாகனங்களை ஆய்வு செய்வதற்காகவும், பராமரிப்பதற்காகவும் மதுரை, திண்டுக்கல், தரும்புரி, காஞ்சிபுரம், வேலூர், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் ஒரு கோடியே 2 இலட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஏழு அரசு நடமாடும் பணிமனைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.