பெரம்பலூரில் காய்கறிகளைத் தொடர்ந்து பழ வகைகளும், பூக்களின் விலைகளும் அதிகரித்ததால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனா்.
ஆடிமாதம் விலையேற்றம் குறையும் என எதிர்பார்த்து காத்திருந்த பொதுமக்களை திடுக்கிட வைத்துள்ளது வாழை, ஆப்பிள், மல்லிகை, ஜம்மங்கி, செவ்வந்தி, மெர்பல் உள்ளிட்ட பூக்களின் விலை.
மேலும் வாழைத்தாரை 2 மாதங்களுக்கு முன்பு ரூ.250-க்கு வாங்கி சீப்பாக வியாபரம் செய்து வந்த வியாபாரிகள் தற்போது வாழைத்தார் ஒரு ஜோடி ரூ.1000 -க்கும் அதிகமாக விலையேற்றம் கண்டதால் வாங்கினாலும் மக்கள் வாழை பழங்களின் விலையை கேட்டு வாங்காமால் செல்வதால் விற்பனையின்றி பழங்கள் அழுகிபோவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
அதேபோல் ஆடியில் இரட்டை சதம் அடித்த மல்லி,செவ்வந்தி,ரோஸ், ஜம்மங்கி பூக்களை வாங்க வரும் பெண்கள் கண்களால் ரசித்து விலையை கேட்டதும் காணாமல் போய்விடுவதாக வியாபாரிகள் கலங்குகின்றனர்.
பெரும்பாலும் ஆடி மாதம் கோயில் விஷேசங்களுக்கும் வீட்டு சுப நிகழ்வுகளுக்கும் பழங்களும் பூக்களும் விற்பனை சூடுபிடிக்கும் என எதிர்பார்த்த வியாபாரிகளை மாத வருவாய்க்கு திண்டாட்டம் காண வைத்துள்ளது இந்த விலையேற்றம் என கண்கள் சிவக்க குமுறினர்.
ரூபி.காமராஜ்







