நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளிகள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 10-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளிகள் பணி நிரந்தரம், பணி நிரந்தரம் செய்யும் வரை மாதம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜீவா தொழிற்சங்கம் சார்பில் கடந்த 26 ஆம் தேதி முதல் 10 நாட்களாக தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் என்எல்சி முதலாவது சுரங்கத்திற்கு செல்லும் நுழைவாயிலில்
பணிக்கு செல்லும் தொழிலாளிகள், பணி முடிந்து வீடு திரும்பும் ஒப்பந்த மற்றும்
நிரந்தர தொழிலாளர்களிடம் இரு கை கூப்பி ஆதரவு கேட்டு 6 அம்ச கோரிக்கை
வலியுறுத்தி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தலைமை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் காவல்துறை அனுமதி மறுப்பால் நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் முன்பு உள்ள திடலில் 10-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரூபி.காமராஜ்







