புனேவை சேர்ந்த நீச்சல் வீரர் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான 29 கி.மீ. தூரத்தை 5 மணி நேரம் 30 நிமிடங்களில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
சம்பண்ண ரமேஷ் ஷெலார் என்ற நீச்சல் வீரர் புனேவைச் சேர்ந்தவர். இவர் 21 வயதுக்குட்பட்டோர் பிரிவில், தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான 29 கி.மீ., தூரத்தை, 5 மணி நேரம் 30 நிமிடங்களில் கடந்து அதிவேக இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு முன் இந்த தூரத்தை 8 மணி நேரம் 26 நிமிடங்கள் கடந்ததே சாதனையாக கருதப்பட்டது. ரமேஷ் சேலர் கடந்த வியாழன் அன்று அதிகாலை 6 மணிக்கு நீச்சலை தலைமன்னாரிலிருந்து தொடங்கி பகல் 11.26 மணிக்கு தனுஷ்கோடியை சென்றடைந்தார்.
இதேபோல அகர்தலாவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனையான சுசேதா டெப் பர்மன், 62 கிமீ தூரம் கொண்ட பாக் ஜலசந்தியைக் கடந்து இருவழியாக நீந்தி முடித்த முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இதனையும் படியுங்கள்: ஆஸ்கர் விருது விழா மேடையில் அவமதிக்கப்பட்டேன் – குனீத் மோங்கா வேதனை!
சுசேதா கடந்த புதன்கிழமை அன்று மாலை 4.45 மணிக்கு தனுஷ்கோடியில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5 மணிக்கு தலைமன்னார் வந்தடைந்தார். அதன் பின்னர் வியாழக்கிழமை மதியம் 12:20 மணிக்கு அரிச்சல் முனைக்கு திரும்பினார்.