ஆஸ்கர் விருது விழாவில் எனது பேச்சு துண்டிக்கப்பட்டதால் பெரும் அதிர்ச்சி அடைந்தேன் என தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டிற்கான 95வது ஆஸ்கர் விருது விழா கடந்த 13 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. ஒவ்வொரு முறையும் ஆஸ்கார் விருது வழங்கும் போதும் இந்தியாவிலிருந்து அதற்கான கூடுதல் எதிர்பார்ப்பு எழுவதுண்டு. அந்த வகையில் பான் இந்தியாவிலிருந்து “நாட்டு நாட்டு’ பாடல் , ஆல் தட் பிரீத்தஸ், தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் கிடைக்குமா என எதிர்பார்த்தனர்.
இதனையடுத்து சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட முதுமலை யானைகள் சரணாலய தம்பதி குறித்த ஆவணப்படமான தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படத்திற்கு விருது வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள ஆசியாவின் பெரிய யானைகள் முகாமான தெப்பக்காட்டில், காட்டு நாயக்கர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதி யானை பராமரிப்பாளர்களாக பணிபுரிகின்றனர்.
யானைகளை பராமரிக்கும் தம்பதியின் கதையைக் கொண்ட படம் தான் தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற குறு ஆவணப்படம். நெட்பிளிக்ஸில் வெளியிடப்பட்ட இந்த ஆவணப்படத்தை கார்த்தி கொன்சால்வ்ஸ் இயக்கியிருக்கிறார். குனீத்மோங்கா தயாரித்திருக்கிறார். ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் குனீத் மோங்கா இருவருக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆஸ்கர் விருது மேடையில் படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ்க்கு மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டது என்றும், தன்னுடைய பேச்சு துண்டிக்கப்பட்டது என்றும் படத்தின் தயாரிப்பாளர் குனீத் மோங்கா வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேட்டி ஒன்றில், “இசையால் என் பேச்சு துண்டிக்கப்பட்டபோது நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். ஆனால் மேடைக்குப் பின்னால், என்னால் எனது உரையை ஆற்ற முடிந்தது. அவர்கள் எங்களைத் துண்டித்தனர். அது நல்லது இல்லை” என்று குனீத் மோங்கா கூறினார்.
https://twitter.com/santhoshd/status/1635104663002558464?s=20
இது தொடர்பான வீடியோவில் ஆஸ்கர் மேடையில் ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ படத்தின் கார்த்திகி கொன்சால்வ்ஸ்க்கு பேசி முடித்ததும், மைக்கை நோக்கி பேச செல்கிறார் தயாரிப்பாளர் குனீத். ஆனால், அவர் பேச முனையும்போது அரங்கில் ஆர்ககெஸ்ட்ரா ஒலிக்கப்பட்டு பின்னர் இருவரும் மேடையிலிருந்து வழியனுப்பபடுகிறார்கள்.







