மதுரையில் பாஜக தேசிய உறுப்பினர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக ஆட்சியைப் பிடிக்கும், அதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. திமுக தோல்வி பயத்தில் உள்ளதால் கூட்டணிக்கு வருபவர்கள் எல்லாம் சேர்த்து கொள்கிறார்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் நட்புறவவோடு பணியாற்றி வருகிறார்கள். மத்திய அமைச்சர் பியூஸ் கோயில் தலைமையில் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என்னுடைய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்படி தமிழ்நாட்டை தலைசிறந்த மாநிலமாக மாற்றி உள்ளார். வேங்கைவயல் குற்றவாளியை கண்டுபிடித்தார்களா? அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் யார் அந்த சார் என்பதை கண்டுபிடித்தார்களா?
திமுக ஆட்சியில் பால் விலை முதல் பத்திரம் விலை வரை உயர்ந்துள்ளது, எந்த குறியீட்டின் அடிப்படையில் தமிழ்நாடு வளர்ச்சி பெற்று உள்ளது என முதல்வர் கூறுகிறார். தமிழ்நாடு 11% வளர்ச்சி அடைந்துள்ளது என்றால் அது மத்திய அரசின் பங்குடன் வளர்ச்சி அடைந்துள்ளது. மதுரையில் தமிழ்நாட்டுக்கான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பார்.
தமிழ் கலாச்சாரத்தின் அடிப்படையில் பிரதமரை தமிழ்நாடு முதலமைச்சர் வரவேற்பு வரவில்லை. தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தம்பட்டம் அடித்துக் கொள்ள வேண்டியதுதான். தமிழ்நாடு மக்கள் மு.க.ஸ்டாலினுக்கு தக்க பாடம் ஓட்ட தயாராகி விட்டார்கள். ஆறு முறை ஆட்சி புரிந்த திமுகவால் ஏன் தமிழ்நாடு வளரவில்லை. தமிழகத்தில் தார்மீக ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் இரண்டு கூட்டணிகள் தேர்தலை சந்திக்கிறது.
திமுக அகற்றப்பட வேண்டும் என ஒரு கூட்டணியும், திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என ஒரு கூட்டணியும் உருவாகி உள்ளது. திமுக தீய சக்தி என்பதால் ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என அதிமுக தொண்டர்கள் பாடுபடுகிறார்கள். ஓபிஎஸ் போய்விட்டால் அவர் பின்னாடியே அதிமுக தொண்டர்கள் செல்ல மாட்டார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அதிமுகவே உண்மையான அதிமுக என்று தெரிவித்துள்ளார்.







