காரைக்காலில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமகனுக்கு பரிசளிக்க வந்த நண்பர்கள் ஆப்பிளுக்கு பதிலாக தக்காளியை பரிசாக வழங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சமீபகாலமாக, தக்காளியின் விலை விண்ணை தொடும் அளவிற்கு அதிகரித்து வருவதால் ஒரு கிலோ தக்காளி ரூ130 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனாலேயே சில வியாபாரிகள் தங்கள் கடைகளில் தக்காளி என எழுதப்பட்டிருந்த இடங்களில் எல்லாம் தங்கம் என எழுதி அதிர்ச்சி ஏற்படுத்தி வருவதோடு, பொதுமக்களும் தக்காளியை பார்த்து பார்த்து உபயோகித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் தக்காளி விலை உயர்வை உணர்த்தும் வகையில், காரைக்காலில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமகனுக்கு பரிசளிக்க வந்த நண்பர்கள் ஆப்பிளுக்கு பதிலாக தக்காளியை பரிசாக வழங்கிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
காரைக்கால் கருக்கங்குடி பகுதியைச் சேர்ந்த நசீர் என்பவருக்கும், திருப்பட்டினம் பகுதியை சேர்ந்த ரஹமத் நிஷா என்பவருக்கும் நேற்றைய தினம் நடைபெற்ற திருமணத்தின் போதுதான் இந்த வித்யாசமான பரிசளிப்பு நண்பர்களால் வழங்கப்பட்டுள்ளது.
- பி. ஜேம்ஸ் லிசா







