முக்கியச் செய்திகள் தமிழகம்

அக்னிபாத் அற்புதமான திட்டம்- அண்ணாமலை பெருமிதம்

இந்திய ராணுவத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் அற்புத திட்டம் அக்னிபாத் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் போராட்டத்தை தூண்டிவிடுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். 

பொள்ளாச்சியில் நடைபெற்ற கோவை மாவட்ட பாஜக மாநாட்டில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அரசின் திட்டங்களை காப்பியடித்து திமுக அரசு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக விமர்சித்தார். காவேரி விவகாரம், கச்ச தீவு விவகாரங்களில்  மிகப்பெரிய நாடகத்தை திமுக நடத்தி வருவதாகவும் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.  பொள்ளாச்சியை தனி மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நீட் தேர்வு தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கடிதம் எழுதியதாகக் கூறிய அண்ணாமலை, ஆனால் கடிதம் எழுதி ஒன்பது மாதம் ஆகியும் இதுவரை எந்த முதலமைச்சரும் பதில் அளிக்கவில்லை எனத் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சரை தவிர பிற மாநில முதலமைச்சர்கள் நீட் தேர்வை விரும்புவதாகவும் அண்ணாமலை கூறினார்.

மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்களை பட்டியலிட்டு பேசிய அண்ணாமலை,  கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவை பிரதமர் மோடி தலை நிமிரச் செய்துள்ளதாகக் பெருமிதத்துடன் கூறினார். ரஷ்யா – உக்ரைன் போரில் இந்திய மாணவர்களை துணிச்சலுடன் மீட்டு அழைத்து வந்தவர் பிரதமர் மோடி என்றும் அவர் கூறினார். பெண்கள் நாட்டில் கம்பீரமாக வாழ பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக அண்ணாமலை புகழாரம் சூட்டினார். காங்கிரஸ் ஆட்சியில் புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படவில்லை என்று விமர்சித்த அவர், பாஜக ஆட்சியில் நாட்டில் புதிதாக ஏராளமான கம்பெனிகள் உருவாக்கப்பட்டு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இந்திய ராணுவத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் அற்புத திட்டம் அக்னிபாத் என கூறிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை,  இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் போராட்டத்தை தூண்டிவிடுவதாகவும் குற்றம்சாட்டினார்.

 

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புதிய கல்விக் கொள்கைக்கு வரவேற்பு: அமித் ஷா

Halley Karthik

சிலம்பம் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்கக் கோரிக்கை

Halley Karthik

அன்புமணி மீதான வழக்கு ரத்து

Ezhilarasan