மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட 10 ரயில் நிலையங்களில் இலவச மருத்துவ உதவி மையம்

மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட 10 ரயில் நிலையங்களில் இலவச மருத்துவ உதவி மையங்களுக்கான பணிகளை தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது. ரயில் பயணிகளின் வசதிக்காக, இந்திய ரயில்வே தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடு பல்வேறு வசதிகளை மேம்படுத்தி…

மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட 10 ரயில் நிலையங்களில் இலவச மருத்துவ உதவி மையங்களுக்கான பணிகளை தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது.

ரயில் பயணிகளின் வசதிக்காக, இந்திய ரயில்வே தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடு பல்வேறு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. அதன்படி, ஓய்வு அறை, லிப்ட் வசதி, எஸ்கலேட்டர் வசதி, சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதேபோல, பயணிகள் அதிகமாக வந்து செல்லும் ரயில் நிலையங்களில் அவசரகால இலவச மருத்துவ உதவி மையங்களையும் தெற்கு ரயில்வே நிறுவி வருகிறது.

தற்போது, சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட சில முக்கிய ரயில் நிலையங்களில் மட்டும் இந்த இலவச மருத்துவ உதவி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில், முதலுதவி அளிக்க தேவையான மருந்துகளும், சிகிச்சை முறைகளும் உள்ளன. ஒரு மருத்துவரும், இரண்டு செவிலியர்களும் எப்போதும் பணியாற்றுகின்றனர்.

அண்மைச் செய்தி: ‘மதுரை – தேனி சிறப்பு ரயில்சேவை நேரம் மாற்றம்; மதுரை கோட்ட ரயில்வே’

இந்த மருத்துவ மையங்களை மேலும் முக்கிய ரயில் நிலையங்களில் விரிவுபடுத்த வேண்டும் என்று பயணிகளின் கோரிக்கையை ஏற்று மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட 10 ரயில் நிலையங்களில் இலவச மருத்துவ உதவி மையம் திறப்பதற்கான பணியை தெற்கு ரயில்வே துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரயில் நிலையங்களில், பயணிகளுக்கு திடீரென ஏற்படும் காயம், மாரடைப்பு, மூச்சுத்திணறல் உட்பட சில உபாதைகளுக்கு முதலுதவி தேவைப்படும் அதுபோன்ற பயணிகளின் நலனுக்காக இலவச மருத்துவ உதவி மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் சில ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள மையம் போல், மதுரை, திண்டுக்கல், ராமேஸ்வரம், துாத்துக்குடி, கோவில்பட்டி, தென்காசி, திருச்செந்துார், காரைக்குடி, பழநி, விருதுநகர் ஆகிய 10 ரயில் நிலையங்களிலும் அமைக்க பணி ஒப்பந்தம் வெளியிட்டுளதாகவும் இதில், தேர்வு செய்யப்படும் மருத்துவமனைகள் சார்பில், இந்த மையங்கள் அமைக்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.