முக்கியச் செய்திகள் குற்றம்

வெளிநாட்டிலிருந்து இலவச பரிசு; ரூ.10 லட்சம் சுருட்டிய இருவர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பெண்ணிடம் வெளிநாட்டிலிருந்து
பரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறி 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவரை  நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், மொபைல்போன் அழைப்பு மூலமாக மருதங்கோடு பகுதியை
சேர்ந்த பெண்ணிடம்  வெளிநாட்டிலிருந்து இலவசமாக சில பரிசு பொருட்கள் தருவதாக கூறி நம்ப வைத்து சுங்க தேர்வை மற்றும் வரிகள் செலுத்த வேண்டும் என பல்வேறு கட்டங்களாக 9,49,000/- ரூபாயை அடையாளம் தெரியாத சைபர் மோசடி நபர்கள் ஏமாற்றியுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுகுறித்து அந்தபெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத்திடம் புகார் அளித்தார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் மேற்பார்வையில் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் குமார்(23) மற்றும் அமான் கான் (19) ஆகிய இருவரும் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து உத்திரபிரதேசம் மாநிலம் விரைந்த குமரி சைபர் போலீசார் எட்டாவா மாவட்டம் சென்று இரு குற்றவாளிகளையும் கைது செய்து குமரி மாவட்டம் அழைத்து வந்தனர்.

பின்னர் அவர்கள் இருவரையும் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். இந்த வழக்கில் குற்றவாளிகளை
கைது செய்த சைபர் கிராம் போலீசாரை மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கல்லூரி தாளாளருக்கு நிபந்தனை ஜாமீன்; பாலபாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம்

Arivazhagan Chinnasamy

ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0; கஞ்சா வியாபாரிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

Arivazhagan Chinnasamy

பத்து நாட்களில் ரூ725 கோடி வசூலை அள்ளிய பதான் திரைப்படம்

Web Editor