அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விரைவில் இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வாயிலில், தனியார் அமைப்பு சார்பில் ஏழை மக்களுக்கு முழு ஊரடங்கு முடியும் வரை 3 வேளை இலவச உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கொரோனா பாதிப்பை போக்கவே முதல்வர் முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளதாகக் கூறினார். ஈஷா யோகம் மையம் மீதான நில அபகரிப்பு புகார் குறித்த கேள்விக்கு, எங்கு, யார் தவறு செய்தாலும் திமுக ஆட்சியில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
ஸ்ரீரங்கம் ஜீயர் நியமனம் குறித்து இந்து அறநிலைய துறையே முடிவு செய்யும் என தகவல் வெளியான நிலையில், இன்று மாலை இந்து அறநிலைய துறை சார்பில் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், கூட்டத்திற்குப் பிறகு ஸ்ரீரங்கம் ஜீயர் நியமனம் தொடர்பான முடிவு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.







