தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிட்டது: எல்.முருகன்!

தமிழகத்தில் தாமரை மலராது என்று கூறியவர்களுக்கு பதிலடி தரும் வகையில் தமிழகத்தில் தாமரை மலர்ந்துள்ளது என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமாக கமலாலயத்தில் தமிழக தேர்தலில்…

தமிழகத்தில் தாமரை மலராது என்று கூறியவர்களுக்கு பதிலடி தரும் வகையில் தமிழகத்தில் தாமரை மலர்ந்துள்ளது என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமாக கமலாலயத்தில் தமிழக தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்களான நயினார் நாகேந்திரன், சரஸ்வதி, காந்தி, வானதி சீனிவாசன் ஆகியோரை சட்டப்பேரவைக்கு வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகன், இன்றைய நாளை தமிழக பாஜக வரலாற்றில் முக்கியமான நாளாகப் பார்ப்பதாகக் கூறினார். எல்லாரும் சொன்னார்கள் தமிழகத்தில் தாமரை மலராது என்று அவர்கள் அனைவருக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக இன்று தமிழகத்தில் மலர்ந்துள்ளது.

ஒரு வருடங்களுக்கு முன்பு நான் மாநில தலைவராக பதவி ஏற்கும் போது பாஜக சேர்ந்தவர்கள் சட்டமன்றத்தில் இடம் பெறுவார்கள் சபதம் ஏற்றோம் அதனை இன்று நிறைவேற்றிக்காட்டியுள்ளோம். பாஜகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமான தவறுகளை சுட்டிக் காட்டுவார்கள் எனவும் எல்.முருகன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.