வட்டி இல்லா நகைக் கடன் தருவதாக ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட செய்த ரூபி ஜூவல்லர்ஸ் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக்கோரி, பாதிக்கப்பட்டோர் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ள ரூபி ஜூவல்லர்ஸ் என்னும் நிறுவனத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுச் சென்றுள்ளனர். இந்நிலையில் திடீரென ரூபி ஜூவல்லர்ஸ் நிறுவனம் தங்களது நிறுவனத்தை மூடிவிட்டு சுமார் 300 கிலோ தங்க நகைகளுடன் தலைமறைவாகினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நகைகளை அடகு வைத்த நபர்கள், கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர். பின்னர் இந்த வழக்கு, பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. மேலும் குற்றவாளிகளை கண்டறிந்து நகைகளை மீட்டுத் தர வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தலைமறைவாக இருந்த ரூபி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஐந்து பேரை கைது செய்தனர்.
இதையும் படியுங்கள் : ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் : Live Updates
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தனி நீதிபதி அமைத்து வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நகைகளை மீட்டுத் தரக் கோரியும், பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.