வயதான பெண்களின் கவனத்தை திசை திருப்பி 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நகை பணம் திருடி வந்த தம்பதியை போலீஸ் கைது செய்தனர்.
மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சித்திரவேல் பார்வதி தம்பதியினர் மதுரை
மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் திருடி வந்துள்ளனர் இந்நிலையில்
போலீசார் தொடர்ந்து சித்திரவேல் பார்வதி தம்பதியினரை கண்காணித்து வந்ததாக
கூறப்படுகிறது இந்நிலையில் காவல்துறையினர் தங்களை கண்காணித்து வருவதை அறிந்து கொண்ட அவர்கள் திருடும் தொழிலை மதுரையில் இருந்து தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களுக்கு மாற்றியதாக கூறப்படுகிறது.
இவர்கள் வயதான பெண்களிடம் நைசாக பேசி அவர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் மற்றும் அரசால் வழங்கப்படும் கடன் உதவிகள் பெற்று தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி அவர்களின் கவனத்தை திசை திருப்பி அவர்களிடமிருந்து தங்க நகைகள் பறித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2019 முதல் 2021 வரை அரசு மருத்துவமனை வளாகம்
நீதிமன்ற வளாகம் மற்றும் பேருந்து நிலையங்களில் பல்வேறு பெண்களிடம் நைசாக பேசி
நகைகளை கொள்ளை அடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் ஹரிஹரன் பிரசாத் அவர்களின் உத்தரவின் பெயரில் திருடர்களைப்
பிடிக்க உதவி ஆய்வாளர் மகேஸ்வரராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் பல்வேறு சிசிடிவி காட்சிகள் ஆராயப்பட்டு திருடியது சித்திரவேல்
பார்வதி தம்பதியினர் என உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்றைய தினம்
இந்த இருவரும் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே நிற்பதாக தனிப்படை
காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது இந்த தகவலின் அடிப்படையில்
மார்த்தாண்டத்திற்குஉதவி ஆய்வாளர் மகேஸ்வர ராஜ் தலைமையில் சென்ற
காவலர்கள் சித்திரை பார்வதி தம்பதியினரை அதிரடியாக கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் சென்னையில் எட்டு
இடங்களிலும், புதுச்சேரியில் மூன்று இடங்களிலும் மற்றும் கடலூர் தர்மபுரி
கன்னியாகுமரி, மதுரை என 20க்கும் மேற்பட்ட இடங்களில் இவர்கள் கைவரிசை காட்டி இருப்பதும் தெரியவந்தது. தனிப்படை காவலர்கள் தேடி வந்த நிலையிலும்
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கைவரிசை காட்டி வந்துள்ளனர்.
2019 முதல் போலீஸிடம் சிக்காமல் இருந்த கணவன் மனைவியை கண்டுபிடிக்க பல்வேறு
மாவட்ட தனிப்படை காவலர்கள் தேடி வந்தது குறிப்பிடதக்கது.
மேலும் சித்திரவேல் பார்வதி தம்பதியினர் மீது சென்னை பாண்டிச்சேரி
அறந்தாங்கி கடலூர் தர்மபுரி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காவல்
நிலையங்களில் 50 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடதக்கது.
அதுமட்டுமல்லாமல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 20 க்கும் மேற்பட்ட
இடங்களில் கைவரிசையை காட்டியுள்ளார்கள் என்பது முதற் கட்ட விசாரணையில்
தெரியவந்துள்ளது.







