சின்னாற்றில் பேரூராட்சி குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.4 .65 கோடியில் 4 புதிய கிணறுகள் அமைக்கும் திட்டம்!

பாலக்கோடு அருகே சின்னாற்றில் பேரூராட்சி குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.4.65 கோடி மதிப்பீட்டில் 4 புதிய கிணறுகள் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் 18 வார்டுகளில் 20…

பாலக்கோடு அருகே சின்னாற்றில் பேரூராட்சி குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.4.65 கோடி மதிப்பீட்டில் 4 புதிய கிணறுகள் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் 18 வார்டுகளில் 20 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரும் நிலையில், குடிநீர் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைப் பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ரூ.4.65 கோடியில் புதிய 4 கிணறுகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி திட்டத்தை துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து சின்னாறு படுகையில் 15 மீட்டர் ஆழம், 4 மீட்டர் அகலம் கொண்ட 4 புதிய கிணறுகள் அமைக்கும் பணியை பேருராட்சி தலைவர் பி.கே.முரளி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் கணேசமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணி , பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

சௌம்யா.மோ

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.