தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே இருசக்கர வாகனம் மின் கம்பத்தில் மோதிய விபத்தில் தந்தை கண்முன்னே இறந்த மகன், உயிருக்கு ஆபத்தான நிலையில் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டம், சிதம்பரவிலக்கு கிராமத்தை சேர்ந்தவர் மாவீரன். . இவருக்கு 5 வயதில் ஒரு மகளும், 9 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில், இவரது மகன் கிருஷ்ணேஷ்வரனுக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரை கடமலைக்குண்டு கிராமத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து விட்டு மீண்டும் சிதம்பரவிலக்கு கிராமத்திற்கு பைக்கில் சென்றனர்.
கடமலைக்குண்டை அடுத்த பழங்குடியினர் காலனி பகுதியில் சென்ற போழுது கட்டுப்பாட்டை இழந்த பைக் நிலை தடுமாறி சாலையோரம் உள்ள மின் கம்பத்தில் மோதியது. இதில் பைக்கில் முன்னால் அமர்ந்திருந்த சிறுவன் கிருஷ்ணேஷ்வரனின் தலை மின் கம்பத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய மாவீரனை ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமவனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து கடமலைக்குண்டு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை கண்முன்னே மகன் துடிதுடித்து இறந்த சம்பவம் கடமலைக்குண்டு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ம. ஶ்ரீ மரகதம்







