கரூர் தென்னிலை அருகே நேருக்கு நேர் இரு கனரக வாகனங்கள் மோதிய விவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
புதுக்கோட்டையில் உள்ள குலதெய்வ கோயில் வழிபாட்டை முடித்துவிட்டு பொள்ளாச்சி கிணத்துக்கடவிற்கு 10 நபர்கள் ஊருக்கு சென்ற தோஸ்த் வாகனமும், காங்கேயத்திலிருந்து திருச்சிக்கு தார் ஏற்றி வந்த மற்றொரு கனரக வாகனமும் நேருக்கு நேர் மோதின. இதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயங்களுடன் கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
தனியார் மருத்துவமனையில் சேர்க்ப்பட்ட நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்தவர்கள் 4 பேருடைய உடலையும் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தென்னிலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்களில் இருவர் கோவை கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி (38) மற்றும் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த நதியா(37) எனதெரிய வந்தது.
பாலச்சந்திரன்(12), கோவர்தனி(10), பன்னீர்செல்வம், ரூபன் என நான்கு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
அனகா காளமேகன்






